இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலகா, நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் இங்கிலாந்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக தேசிய அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.
மதியம் 1.15 மணியளவில் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். தற்போது, நீர்கொழும்பிலுள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டள்ளனர்.
இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் சென்ற அணியில் இணைக்கப்பட்ட இந்த மூன்று கிரிக்கெட் வீரர்களும், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு (27) டர்ஹாமில் தங்கியிருந்தபோது உயிர் குமிழியை மீறி நகர் வலம் வந்திருந்தனர்.
அந்த வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து அவர்கள் நாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அவர் மீதான ஒழுக்காற்று விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் தண்டனை விபரம் அறிவிக்கப்படுமென்றும் கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.