நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வதிரி பகுதியில் இன்று (22) மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று மாலை இந்த விபத்து நடந்தது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளம் குடும்பஸ்தர்கள், வதிரி அமெரிக்க மிசன் பாடசாலைக்கு அருகிலுள்ள ஐமூலை வளைவில் நிதானமிழந்து, மின் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகினர்.
வீரவாகுப்பிள்ளை கெங்கேஸ்வரன் (33) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கண்டியை சேர்ந்த இவர், தற்போது வடமராட்சி, திக்கத்தில் திருமணம் முடித்து வாழ்கிறார். அவருடன் பயணித்த திக்கத்தை சேர்ந்த மற்றொரு இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிசிஆர் சோதனை முடிவின் பின்னர், நாளை உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்படும்.