26.3 C
Jaffna
December 29, 2024
Pagetamil
இலங்கை

வடக்கில் நேற்று 96 பேருக்கு தொற்று!

வட மாகாணத்தில் நேற்று 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வு௯டத்‌தில்‌ நேற்றுப்‌ பகல்‌ 596 பேருக்கு மேற்‌கொள்ளப்பட்ட பி.சி.ஆர்‌. பரிசோதனையில்‌ 55 பேருக்குத்‌ தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாண மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில்‌ 20 பேருக்கும்‌, புதுக்‌குடியிருப்பு மற்றும்‌ வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில்‌ தலா 6.பேருக்கும்‌, யாழ்ப்பாணம்‌ போதனா மருத்துவமனை மற்றும்‌ இரணைமடு தனிமைப்படுத்தல்‌ மையம்‌ என்பவற்‌றில்‌ தலா 5 பேருக்கும்‌, பளை சுகாதார மருத்துவ அதிகாரி, சங்கானை பிரதேச மருத்துவமனை, மன்னார்‌ கடற்படை முகாம்‌ என்பவற்றில் தலா 3 பேருக்கும்‌, ஆனைவிழுந்தான்‌ கொரோனா இடைத்‌ தங்கல்‌ நிலையம்‌, வெலிஓயா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு, இளவாலை பிரதேச மருத்துவமனை மற்றும்‌ நெதோர்ன்‌ சென்ரல்‌ மருத்துவமனை
ஆகியவற்றில்‌ தலா ஒவ்‌வொருவருக்‌கும்‌ தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்‌ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம்‌ போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில்‌ நேற்‌று முன்தினம்‌ இரவு 313 பேருக்கு மேற்‌கொள்ளப்பட்ட பி.சி.ஆர்‌ பரிசோதனையில்‌ 11 பேருக்குத்‌ தொற்று உறுதிப்படுத்‌தப்பட்டது. சாவகச்சேரி சுகாதார மருத்‌துவ அதிகாரி பிரிவில்‌ 4 பேருக்கும்‌,
யாழ்ப்பாணம்‌ போதனா மருத்துவமனையில்‌ 3 பேருக்கும்‌, பருத்தித்துறை ஆதார மருத்துவமனை, பண்டத்தரிப்பு மற்றும்‌ வேலணை பிரதேச மருத்துவமனைகளில் தலா ஒவ்வொருவரும், வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் ஒருவருக்கும் தொற்று உறுதிப்‌படுத்தப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நேற்று 350 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 30 பேருக்கு தொற்று உறுதியானது.

நானாட்டான் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், காரைநகர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், யாழ் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 16 பேருக்கும் தொற்று உறுதியானது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் வீதியில் சாகசம் காட்டிய தனியார் சிற்றூர்தியின் வழித்தட அனுமதி இரத்து!

Pagetamil

பல்கலைக்கழக வளாகங்களாக மாறும் தேசிய கல்வியியல் கல்லூரிகள்

east tamil

சிகிரியாவுக்காக நிதி உதவியை முன்மொழிந்த கொரிய நிறுவனம்

east tamil

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

பெரஹரா யானை தாக்கியதில் ஒருவர் காயம்

east tamil

Leave a Comment