25.7 C
Jaffna
January 17, 2025
Pagetamil
உலகம்

உலகின் 3வது மிகப்பெரிய வைரம் கண்டறியப்பட்டது!

ஆபிரிக்க நாடான பொட்ஸ்வானாவில் உலகில் மூன்றாவது பெரிய வைரம் கண்டறியப்பட்டுள்ளது.

பொட்ஸ்வானா உலகின் வைரங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று. இந்த நிலையில் பொட்ஸ்வானாவில் சமீபத்தில் எடை அதிகமுள்ள வைரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் எடை சுமார் 1,098 கரட் ஆகும். உலகின் கண்டறியப்பட்ட மூன்றாவது பெரிய வைரம் இதுவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகின் இரண்டாவது பெரிய வைரமும் பொட்ஸ்வானாவில் 2016 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எடை 1,109 கரட் ஆகும்.

உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதன் எடை 3,106 கரட் அளவு கொண்டதாகும்.

கொரோனா நெருக்கடி காரணமாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரத்தை ஏலத்தில் விடமுடியவில்லை என்று பொட்ஸ்வானா அரசு தெரிவித்துள்ளது.

ஏலம் விட்ட பிற்கும் வரும் தொகையை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உரிமையாளருக்காக 2 மாதங்கள் காத்திருக்கும் நாய்

Pagetamil

கைதிகள் துணையுடன் உறவு கொள்ள சிறைச்சாலைகளுக்குள் ‘காதல் அறைகள்’: இத்தாலி உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஏற்படும் மாற்றம்!

Pagetamil

இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது: ஆறு வார காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விவரங்கள்!

Pagetamil

எலான் மஸ்க் வசமாகும் டிக்டொக் செயலி

east tamil

அமெரிக்க பாராளுமன்றத்தில் தமிழ் மாதமாக ஜனவரி

east tamil

Leave a Comment