பல்பொருள் அங்காடிகளின் ஒன்லைன் விநியோக சேவைகள் மூலம் மதுபான விற்பனைக்கு நிதி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல நிபந்தனைகளின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்கள ஆணையாளர் எம். ஜே. குணசிறி தெரிவித்தார்.
நிபந்தனைகளின்படி, மதுபான விற்பனையின் விளம்பரம் தடைசெய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 21 வயதுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் விற்கப்படுவதை உறுதிசெய்ய ஒரு முறை செயல்படுத்தப்பட வேண்டும்.
மதுபானம் வழங்கப்பட வேண்டிய முறை குறித்த வழிகாட்டுதல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
இது தொடர்பாக COVID-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPC) இதுவரை அனுமதி வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடைகளின் போது ஒன்லைன் விநியோக சேவைகள் மூலம் மதுபானங்களை விற்பனை செய்ய என்ஓசிபிசியிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்றார்.