26.7 C
Jaffna
January 14, 2025
Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பு – கித்துள் வடிச்சல் ஆற்றை ஊடறுத்து இடம்பெறும் மணல் அகழ்வை நிறுத்தக்கோரி மீனவர்கள், விவசாயிகள் எதிர்ப்பு நடவடிக்கை!

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கித்துள் வடிச்சல் ஆற்றை ஊடறுத்து உழவு இயந்திரம் மற்றும் கனரக வாகனங்கள் மூலம் மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் இதனால் தமது மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்து கித்துள் வடிச்சல் ஆற்றுப்பகுதியில் இன்று காலை 10.00 மணியவில் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு நடிவடிக்கையில் ஈடுபட்டனர்.

சுமார் 30 மீனவர்கள் விவசாயிகள் குறித்த ஆற்றுப்பகுதியில் சமூக இடைவெளியைப் பேணி தமது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்த ஆற்றை ஊடறுத்து இரவு பகலாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் இதனால் தாம் தொழிலுக்கு ஆற்றைக் கடந்து செல்ல பெரிதும் சிரமப்படுவதாகவும் ஆறு அதிகமாக தற்போது பள்ளமாகிச் செல்வதாகவும் தெரிவிக்கும் மீனவர்கள் தாம் செல்லும் வீதியும் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல தடவை முறையிட்டும் இதை தடுக்க முடியாதுள்ளதாக குற்றம் சாட்டும் மீனவ விவசாயிகள் தமது பிரச்சிணை தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் கவணம் எடுக்க வேண்டும் எனவும் இவ் கித்துள் வடிச்சல் ஆற்றுப்பகுதியால் இடம்பெறும் மணல் அகழ்வை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆலய அபிவிருத்தி மற்றும் தொழும்பாளர் நலன் சந்திப்பு

east tamil

துருது பௌர்ணமி தினத்தில் கிழக்கு மாகாண ஆளுநரின் விஜயம்

east tamil

காத்தான்குடி பகுதியில் போதைப்பொருளுடன் ஏழு பேர் கைது

east tamil

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக திருகோணமலையில் கையெழுத்துப் போராட்டம்

east tamil

திருகோணமலை விஸ்வநாத சமேத சிவன் ஆலயத்தில் திருவெம்பாவை தேர் உற்சவம்

east tamil

Leave a Comment