27.8 C
Jaffna
December 28, 2024
Pagetamil
இலங்கை

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை கொரோனா பரவல்: 2 மாத குழந்தைக்கும் தொற்று!

கிளிநொச்சி கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தர்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மாதக் குழந்தைக்கு தொற்று ஏற்றுப்பட்டுள்ளமை நேற்று மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் தந்தை கிளிநொச்சியில்உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுபவர். அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதனை தொடர்ந்து அவரது மனைவி மற்றும் இரண்டு மாதக் குழந்தைக்கு அண்டிஜன் பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டது. இதில் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தாய்க்கு அண்டிஜன் பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்த போதும் அவருக்கு இருக்கும் அறிகுறிகள் தொற்றுக்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதனால் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேதேவளை நேற்றைய தினம் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் 14 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் ஏழு பேருக்கு தொற்று இருப்பது
உறுதி செய்யப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கள்ளக்காதலியில் சந்தேகம்; கத்தியால் குத்த முயற்சித்த கள்ளக்காதலன்; தகராறில் 13 வயது சிறுமி பலி

east tamil

குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவர்களுக்கு அரசினால் நிவாரண தொகை

east tamil

“அர்ச்சுனா குழப்பத்தின் பிரதிநி” – சகாதேவன்

east tamil

யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

east tamil

யாத்திரைகளை துன்புறுத்திய 22 பேர் கைது

east tamil

Leave a Comment