26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
கிழக்கு

கல்முனையில் 24 மணித்தியாலத்தில் 3 கொரோனா மரணங்கள்!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவை சேர்ந்த மூவர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளதாகவும் 16 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட ஆலையடிவேம்பைச் சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையிலும், அம்பாறை வைத்தியசாலையில் சம்மாந்துறையைச் சேர்ந்த நபர் ஒருவரும், கல்முனைக்குடி அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மருதமுனையைச் சேர்ந்த நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

எனவே வீரியமடைந்து வருகின்ற கொரோனா அனர்த்தத்திற்கு முகம் கொடுப்பதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்புகளை வழங்க முன்வர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சம்மாந்துறை நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு

east tamil

UPDATE – களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

முறக்கொட்டாஞ்சேனை விபத்து – ஒருவர் பலி

east tamil

கல்முனையில் 12Kg கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

east tamil

Leave a Comment