இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் இன்று (24) அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 457ஆக உயர்ந்துள்ளது.
இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு-
பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த, 68 வயதான பெண் ஒருவர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலை மருத்துவ பீட வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (24) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன், குருதி விஷமடைவு அதிர்ச்சி மற்றும் உக்கிர சிறுநீரக நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்த, 69 வயதான பெண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 21ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர நீரிழிவு மற்றும் கொவிட்-19 தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டுகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 55 வயதான ஆண் ஒருவர், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (23) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த, 60 வயதான ஆண் ஒருவர், வெலிசறை காச நோய் வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (24) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் உக்கிர மாரடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.