இதயரேகைப்படி வாழ்க்கைத்துணை எப்படி அமையும்?
ஒருவரின் வாழ்க்கை தொடர்பில் கைரேகை சாஸ்திரத்தை நன்கு கற்ற ஒருவரால் தான் கணிப்பிட முடியும் . ஒருவரின் குணாதிசயங்கள், உடல்நலம், திருமணம் என வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்து விடயங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.
உங்கள் கையில் உள்ள ஒவ்வொரு ரேகையும் அதிர்ஷ்டம் மற்றும் எதிர்கால கணிப்புகளின் அடிப்படையில் ஒரு தனித்துவமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
எதிர்காலத்தைப் பற்றி ஆழமான ரகசியங்கள் உங்கள் கைரேகையில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா…
மனிதர்களின் கை, கால்களில் இருக்கும் ஒவ்வொரு ரேகைகளிலும் பல அர்த்தங்கள் மறைந்துள்ளது. அதில் அனைவருக்கும் ஒரே மாதிரியான ரேகைகள் இரு கைகளிலும் அமைவதில்லை. அப்படிப் பார்க்கும் போது ஒரு சிலரின் கைகளில் இருக்கும் இதய ரேகைகள் மட்டும் ஒரே அளவில் இருக்க வாய்ப்புகள் உள்ளது.
அவ்வாறு ஒரே மாதிரியாக இருந்தால், அவர்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை என்று தான் சொல்லலாம். ஆனால், இதுபோன்ற இதய ரேகைகள் அனைவரும் ஒரே சமமாக அமைவதில்லை. ரேகைகள் வாழ்க்கை, காதல் பற்றி அறிதல் ஆகும்.
இதயரேகை எப்படி பார்ப்பது?
கையில் உள்ள முக்கிய ரேகைகளில் ஒன்று தான் இதய ரேகை. இந்த ரேகை சுண்டு விரலின் கீழே ஆரம்பமாகி நடுவிரல் அல்லது ஆள்காட்டி விரலை நோக்கிச் சென்றவாறு இருக்கும்.
ரேகைகள் ஒரே அளவில் இருந்தால் என்ன ஆகும்?
நம்முடைய வலது மற்றும் இடது கைகளை ஒன்றாக வைக்கும் போது நம் கையை இணைக்கும் இதய ரேகைகள் ஒரே மாதிரி சம அளவில் இருந்தால், அவர்களுக்குத் துணையாக வருபவர்கள், மிகுந்த அன்புடனும், நன்கு புரிந்து கொள்பவராகவும், அனுசரித்து நடந்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள்.
வலது கையின் இதய ரேகை நீண்டு இருந்தால் என்ன ஆகும் ?
இடது கையை விட வலது கையின் இதய ரேகை நீண்டு இருந்தால், அதாவது மேல்நோக்கியவாறு இருந்தால் அவர்களுக்கு அமையும் துணை மிகவும் நல்லவராக இருப்பார். மேலும் இவர்கள் தன் இதயம் சொல்வதை மட்டுமே செய்வார்கள். இதனால் இவர்கள் மற்றவர்களின் கருத்துக்களின் மீது அக்கறை கொள்ளமாட்டார்கள். இதயக் கோட்டிற்கு கீழ் நோக்கி ரேகைகள் செல்லுமேயானால் வாழ்க்கையில் அவருக்கு குறைவான அதிர்ஷ்டமே இருக்கும் எனக் கூறப்படுது.
இதய ரேகைக்கு மேலே உள்ள கோடுகள் வைத்து திருமண ரேகை கணிக்கப்படுகிறது. இந்த ரேகை ஒருவருக்கு நீண்டு இருந்தால் திருமணம் தாமதமாகும் என்று சொல்லப்படுகிறது.
இதய ரேகைக்கு மேலே உள்ள கோடுகள் வைத்து திருமண ரேகை கணிக்கப்படுகிறது. இந்த ரேகை ஒருவருக்கு நீண்டு இருந்தால் திருமணம் தாமதமாகும் என்று சொல்லப்படுகிறது.
இதயரேகை சங்கிலி போன்ற அமைப்பில் வரும் சிறு சிறு கோடுகள் இருக்குமேயானால் அவர்களுக்கு வரும் வாழ்க்கைத் துணை அன்பும் பாசமும் மிக்கவர்களாக இருப்பர். அதே சமயம், இதய ரேகை ஆரம்பிக்கும் போது சிறு சிறு கோடுகள் மேலும், கீழுமாகச் சிதறி கிடந்தால் வாழ்க்கைத் துணையுடன் பிரிவு, விவாகரத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கைரேகை நிபுணர்கள் கூறுகின்றன.உ