25.6 C
Jaffna
January 4, 2025
Pagetamil
இலங்கை

ஆலய குருக்கள்மாருக்கு கொரோனா: திருவிழா நிறுத்தப்பட்டு யாழின் முக்கிய ஆலயம் மூடப்பட்டது!

சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் கொடியேற்ற திருவிழாவை நடத்திய மற்றொரு குருக்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, திருவிழா நிறுத்தப்பட்டு, ஆலயம் மூடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிற்குள்ளான குருக்களே, ஆலயத்தில் பக்தர்களிற்கு திருநீறு பூசி விடுவதால், சுதுமலையை மையமாக வைத்து கொரோனா பரவல் ஏற்படலாமென்ற அச்சம் உருவாகியுள்ளது.

சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த உற்சவகம் கடந்த 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

ஆலயத்தில் கொடியேற்றிய குருக்கள், கொடியேற்றத்திற்கு முன்னதாக நயினாதீவு சென்றார், அங்கு கொரோனா தொற்றிற்குள்ளானவருடன் தொடர்பிலிருந்தார் என்ற தகவலையடுத்து, ஆலயத்தின் 3ஆம் திருவிழாவுடன் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

அவருக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் திருவிழாவில் கலந்து கொண்டார்.

இரண்டு நாட்களின் பின் மீண்டும் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் தொற்று உறுதியாகியிருந்தது.

இதையடுத்து, 9ஆம் திருவிழாவுடன் திருவிழா இடைநிறுத்தப்பட்டு, ஆலயம் மூடப்பட்டது. ஆலய தர்மகர்த்தா சபையினர் உள்ளிட்ட ஆலயத்துடன் தொடர்புடைய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம்

Pagetamil

கிளிநொச்சியில் வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் 

Pagetamil

கிளிநொச்சி விபத்தில் உயிரிழந்த தாய்க்கும் சேய்க்கும் நீதி கோரி போராட்டம்

Pagetamil

பதக்கம் சின்னத்தில் போட்டியிடவிருக்கும் திலித் ஜயவீர

east tamil

தூய்மையான இலங்கைக்கான முயற்சி: பராக்கிரம சமுத்திரத்தில் சிரமதானம்

east tamil

Leave a Comment