தனது பதவி காலத்தினுள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சந்தேகநபர்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடியாதுள்ளதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் இதுவரையில் முழுமை பெறாததால் இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாது என அவர் அறிவித்துள்ளார்.
தப்புல டி லிவேரா சட்டமா அதிபர் பதவியில் இருந்து மே 20ஆம் திகதி ஓய்வுபெறுகிறார்.
புதிய சட்டமா அதிபர் பதவிக்கு மேலதிக மன்றாடியார் நாயகம் சஞ்சய் ராஜரத்தினத்தின் பெயர் நாடாளுமன்ற சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1