விபத்தில் ஒருவர் பலி

Date:

வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் மட்டக்களப்பு வாழைச்சேனை வீதியில் வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று இரவு (6) இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர்.

கிண்ணையடிச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான பஞ்சாட்சரம் சவுந்தராஜன் (41) என்ற கோறளைப்பற்று பிரதேச சபையில் காவலாளியாக கடமையாற்றும் ஊழியரே உயிரிழந்துள்ளார்.

குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் முன்னே சென்ற முச்சக்கரவண்டியை முந்தி செல்ல முற்பட்ட வேளை வேகட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியில் மோதுண்டதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது அருகில் இருந்த வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த போதிலும் தலைப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அதிகளவு இரத்தப்போக்கினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தற்போது சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மெற்கொண்டுள்ளனர்.

-க.ருத்திரன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்