சதோசவில் சில பொருட்களின் விலை குறைப்பு

Date:

சில அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களுக்கு லங்கா சதோச நிறுவனம் சிறப்பு விலை குறைப்பை அறிவித்துள்ளது.

வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுகளின் பேரில், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், ஜனவரி 30 முதல் அமலுக்கு வரும் வகையில் ஐந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை லங்கா சதோச நிறுவனம் குறைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சதோச சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்து இந்த உணவுப் பொருட்களை நுகர்வோர் வாங்கலாம்.

இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம், கோதுமை மாவு, வெள்ளைச்சீனி, சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளைப்பச்சை அரிசி (இறக்குமதி செய்யப்பட்ட) ஆகியவற்றின் விலைகளை லங்கா சதோச நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி, ரூ.230க்கு விற்கப்பட்ட 1 கிலோ இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் ரூ.220 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது,

ஒரு கிலோ கோதுமை மாவின் புதிய விலை ரூ.10 குறைக்கப்பட்டு புதிய விலையாக ரூ.165 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளைச்சீனி 1 கிலோவுக்கு ரூ.5 குறைக்கப்பட்டு,  இப்போது ரூ.235ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய விலை ரூ.240 ஆகும்.

1 கிலோ சிவப்பு பருப்பு அதன் முந்தைய விலையான ரூ.288 இலிருந்து ரூ.3 குறைக்கப்பட்டு தற்போது ரூ.285க்கு விற்கப்படுகிறது.

1 கிலோ வெள்ளைப்பச்சை அரிசியின் புதிய விலை அதன் முந்தைய விலையான ரூ.210 இலிருந்து ரூ.1 குறைக்கப்பட்டு, ரூ.209 இற்கு விற்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம்...

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...

பாடசாலை மாணவர்களையும் சென்றடைந்த போதைப்பொருள் – இலங்கையின் எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்து!

போதைப்பொருள் பாவனை நாட்டை சீரழித்து வரும் நிலையில், அது பாடசாலை மாணவர்களையும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்