நேற்றைய தினம் (13.01.2025) ஏறாவூர் 2ம் பிரிவு மக்காமடி வீதியில் 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சோந்த முகமட் ஷரகீர் ஜப்பிரா எனப்படும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை தனது வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் விளையாடிக் கொண்டிருந்த போது, அதற்குள் தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிணற்றின் அருகில் கதிரை வைக்கப்பட்டிருந்த நிலையில், குழந்தை அதில் ஏறி கிணற்றின் பாதையில் சென்று தவறி விழுந்ததுள்ளதாக அறியப்படுகிறது. மாலை 6.00 மணியளவில் குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடியபோது, கிணற்றில் குழந்தை வீழ்ந்து கிடப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு, அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம், பெற்றோரின் கவனயீனத்தினால் ஏற்படுத்திய கோபமான துயரமாகவும், இது குறித்த பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.