26.5 C
Jaffna
January 23, 2025
Pagetamil
கிழக்கு

குழந்தையின் மரண வீட்டுக்கு சென்றுவந்தவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு

போரதீவுப்பற்றில் குழந்தையின் மரண வீட்டுக்கு சென்றுவந்தவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் இன்று (05-01-2025) காலை குளிக்கும் போது தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

போரதீவுப்பற்று தும்பங்கேணி கிராமத்தை சேர்ந்த 50 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான தங்கராசா பரமானந்தம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் (04-01-2025) நீர்நிலையில் வீழ்ந்து உயிரிழந்த குழந்தையின் மரண வீட்டுக்கு சென்றுவிட்டு வந்து கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தபோதே கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக பிரதேசவாசிகளின் உதவியுடன் அவர் பழுகாமம் பிரதேசவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளத்தில் மூழ்கிய திருகோணமலை பாலம்பட்டாறு பத்தினி அம்மன் ஆலயம்

east tamil

நிலாவெளி வைத்தியசாலையில் பறிபோன உயிர்; வைத்தியசாலையின் அசமந்தம்

east tamil

அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற தம்பி தலைமறைவு

east tamil

மூதூரில் வெள்ள நீருக்கு எதிரான போராட்டம்

east tamil

சிறுவர்களின் உயிரை பழிவாங்கிய குறிஞ்சாக்கேணி விடயம் முடிவுக்கு வந்தது

east tamil

Leave a Comment