24.8 C
Jaffna
January 4, 2025
Pagetamil
கிழக்கு

நோய்வாய்ப்பாட்ட நிலையில் காட்டு யானைக்குட்டி

மட்டக்களப்பு காவத்தமுனை வாகநேரி வயல்வெளி பிரதேசத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் 6 வயது மதிக்கத்தக்க காட்டு யானைக் குட்டி ஒன்று நேற்று முதல் (29) விழுந்து காணப்படுகிறது.

நடக்க முடியாத நிலையில காணப்படும் யானைக் குட்டி தொடர்பாக உள்ளுர் விவசாயிகளினால் கிரான் பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து அவர்கள்
சம்பவ இடத்திற்கு வருகை தந்து சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வாரம் முதல் குறித்த வயல் பிரதேசத்தில் தனிமையில் அலைந்து திரிந்த இவ் யானையானது உடல் மெலிந்து உணவு உட்கொள்ள முடியாத நிலையில் பலவீனமுற்ற நிலையில் காணப்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை காவத்தமுனை, மஜ்மா நகர் மற்றும் நாவலடி ஆகிய பிரதேசங்களில் யானைகளின் அட்டகாசம் தொடர்சியாக காணப்படுவதாகவும் அவற்றில் இருந்து தங்களை பாதுகாப்பதற்கு யானை வேலிகளை அமைத்து தருமாறு பிரதேச வாசிகள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

-க.ருத்திரன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காயங்கேணி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப்பொருள்

east tamil

செய்தியாளர் மீது தாக்குதல் – நான்கு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Pagetamil

திருகோணமலை நகர சபையின் முன்னேற்றகரமான செயற்பாடு

east tamil

மூன்றாங் கட்டை மலை விவகாரம்: மூதூரில் சமூக நீதிக்கான போராட்டம்

east tamil

திருக்கோணமலையில் மீண்டும் ஒரு சடலம்

east tamil

Leave a Comment