25.6 C
Jaffna
January 4, 2025
Pagetamil
கிழக்கு

திருகோணமலையில் நிவாரண உதவித்திட்டம்

சீனாவின் ஆதரவுடன், இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிவாரண உதவித் திட்டம் இன்றைய தினம் (29.12.2024) திருகோணமலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, பொதிகளை வழங்குவதில் நேரடியாக பங்கேற்றனர்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை, திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட 700 பயனாளிகள் இந்த உதவித் திட்டத்தின் மூலம் நிவாரணத்தை பெற்றுள்ளனர்.

சீன அரசாங்கத்தின் இந்த மனிதாபிமான உதவி, பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை மீண்டும் நிலைநாட்டும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டதானது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு உள்ளூர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, இலங்கை-சீனா இடையேயான நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தும் செயற்பாடாகவும் பார்க்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வியாழேந்திரனின் சாரதிக்கு விளக்கமறியல்!

Pagetamil

வியாழேந்திரனின் வாகன சாரதிக்கு விளக்கமறியல்

east tamil

கிழக்கு மாகாண ஆளுநர் – இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் சந்திப்பு

east tamil

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சண்முகம் குகதாசனின் கோரிக்கைகள்

east tamil

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு விரைவில் அரச வேலைவாய்ப்பு

east tamil

Leave a Comment