25.4 C
Jaffna
December 29, 2024
Pagetamil
கிழக்கு

அஷ்ஷேய்க் காரி முகம்மது சஆத் நுமானின் கல்முனை வருகை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் இன்று (27) சவூதி அரேபியாவில் புகழ்பெற்ற முக்கியமான இமாம்களில் ஒருவரான அஷ்ஷேய்க் காரி முகம்மது சஆத் நுமானி காத்தான்குடிக்கு விஜயம் செய்தார்.

காத்தான்குடி அல்-அக்ஸா பெரியபள்ளிவாயலில் இவருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், இவரால் ஜும்ஆ பேருரை, தொழுகையினையும் நடத்தியதுடன் பல குரல்களில் அல்-குர்ஆனையும் ஓதிக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து மஹ்ரிப் தொழுகையினை ஏறாவூர் பெரிய மீரா ஜும்ஆ பள்ளிவாயலிலும் இஷா தொழுகையினை வாழைச்சேனை முகைத்தீன் ஜும்ஆ பள்ளிவாசலிலும் நடத்திவைத்தார்.

அஷ்ஷேய்க் முகம்மது சஆத் நுமானி சவூதி அரேபியா மக்கா ஹரம் ஷரீபின் தலைமை இமாமான அஷ்ஷேய்க் சுதைஷின் குரல் உட்பட பல்வேறுபட்ட இமாம்களின் குரல்களில் புனித அல்குர்ஆன் வசனங்களை ஓதக்கூடிய சிறந்த “காரியாக” திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பசுமை புகையிரதமாக 4வது இடத்தில் திருகோணமலை

east tamil

கிழக்கு மாகாண ஆளுநருடன் திருகோணமலை வேலையில்லா பட்டதாரி நிர்வாக, ஏற்பாட்டுக் குழுவினர் சந்திப்பு

east tamil

பொலிஸ் அதிகாரியை தாக்கிய சந்தேக நபர்கள் கைது

east tamil

கல்லடி Bridge Market தீக்கிரை

east tamil

பசுமையான திருகோணமலை திட்டத்தின் கீழ் மர நடுகை – ஹரிதரன் தன்வந்த்

east tamil

Leave a Comment