கழுத்தில் மருத்தடி குத்தி ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட நபரின் கழுத்தில் இருந்த மரத்தடியை அகற்றி உயிர்காக்கும் சத்திரசிகிச்சையை வவுனியா வைத்தியசாலை மேற்கொண்டுள்ளது.
வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த போது தவறி விழுந்தபோது, அவரது கழுத்தில் மரத்தடி ஏறியது. நேற்று (25) இந்த சம்பவம் நடந்தது.
உயிராபத்தான நிலையில் அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை நிபுணர் ரஜீவ் நிர்மலசிங்கம் மற்றும் மயக்க மருந்து நிபுணர் நாகேஸ்வரன் தலைமையிலான மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.
வெற்றிகரமான அறுவை சிகிச்சையில் கழுத்தில் பாய்ந்திருந்த தடி அகற்றப்பட்டு, அந்த நபரின் உயிர் காப்பாற்றப்பட்டது.
நோயாளி தற்போது சீரான நிலையில் உள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1