26.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
கிழக்கு

39 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வுபெறும் திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜன்

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜன் (BA, M.Ed, Dip.In Edu, Dip in Sch.mgn) அவர்கள் தனது 39 வருட கால கல்வி சேவையிலிருந்து இன்றைய தினம் (26.12.2024 வியாழக்கிழமை) ஓய்வு பெறுகின்றார்.

திருகோணமலை கந்தளாயை பிறப்பிடமாகக் கொண்ட இவர், 1985 ஆம் ஆண்டு உதவி ஆசிரியையாக நாவலப்பிட்டி கதிரேசன் வித்தியாலயத்தில் தனது பணியை ஆரம்பித்தார்.

1990களில் கந்தளாய் பரமேஸ்வர மகா வித்தியாலயத்திற்கு மாற்றம் பெற்று உதவி ஆசிரியையாக, பகுதி தலைவராக, பிரதி அதிபராக கடமை புரிந்து 1997ல் அதிபராக நியமனம் பெற்றார்.

தனது அயராத உழைப்பால் 5ம் ஆண்டு புலமைப் பரீட்சை, க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சைகளில் மாணவர்கள் பெருமளவில் சித்தியடைந்து கந்தளாயில் தமிழ் மக்களிடையே ஒரு கல்விப் புரட்சியை ஏற்படுத்த காரணமாயிருந்தார்.

அப் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக பேண்ட் வாத்திய கருவிகளையும் அறிமுகம் செய்த பெருமைக்குரியவராக திருமதி.லிங்கேஸ்வரி ரவிராஜன் அவர்கள் விளங்குகின்றார். பாடசாலை விளையாட்டு மைதானத்தை விஸ்தரிப்பதற்காக சுமார் ஒரு ஏக்கர் காணியை விலையாக வேண்டிய அதிபர் இதற்கான நிதியினை திருமலை நகரத்தில் வீடு வீடாக சென்று டிக்கெட் விற்று சேகரித்தார்.

இரண்டு மாடிகளில் குளக்கோட்டம் என்னும் பெயரில் விளையாட்டு அரங்கம் ஒன்றை அமைத்தது இப்பகுதி மாணவர்களுக்கு அவர் வழங்கிய பெரும் வாய்ப்பாகும்.

பாலர் கல்வியில் அதிக கவனம் செலுத்தியவர் பரமேஸ்வரா என்னும் நாமத்துடன் ஒரு பாலர் பாடசாலையையும் ஆரம்பித்தார்.

2008 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவையில் முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு பெற்றார். இதன்பின் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் பாடசாலை நிர்வாகத்தினர் அப்பாட சாலையின் பழைய மாணவி என்ற வகையில் அக்கலூரியின் அதிபர் பதவியை பொறுப்பேற்றுமாறு கூறியதற்கிணங்க 2018 – இன்று வரை அப்பாடசாலை முதல்வராக கடமை புரிந்துள்ளார்.

மாணவர்களின் திறன்களை வெளிக்கொணர்ந்து, வரலாற்று சாதனை படைத்ததுடன், 50 வகையான இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களை பங்கு பெற்ற செய்து அவர்கள் தேசிய மட்டத்தில் முதன்மை இடங்களை பெற்றுக் கொள்ள சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி மாணவர்கள் மத்தியில் போற்றத்தக்க ஒரு நபராக விளங்கியுள்ளார்.

அதுமாத்திரமின்றி, சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் இட நெருக்கடிக்கான தீர்வாக ஆரம்பப் பிரிவினை மின்சார நிலையை வீதிக்கு இடமாற்றம் செய்வதற்காக திருகோணமலை நகர சபையிடமிருந்து ஒரு ஏக்கர் காணியை பெற்று வகுப்புகளை ஆரம்பிப்பதற்குரிய ஏற்பாடுகளையும் செய்தார்.

இவ்வாறு தனது வாழ்நாளினை கல்விப் பணிக்காக அர்ப்பணித்து 39 வருட கல்வி பணியிலிருந்து இன்றைய தினம் ஓய்வு பெறவுள்ளதை குறித்து கல்வி சமூகம் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

கிழக்கு மாகாண சபையின் புதிய நியமனங்கள்

east tamil

டிப்பர் வாகனம் மோதியதில் பொலிஸார் உயிரிழப்பு

east tamil

திருகோணமலை கடற்பரப்பில் ஆளில்லா விமானம்

east tamil

Update – 3 – கடலில் நீராட சென்ற 3 பேர் – மூவரின் சடலமும் மீட்பு

east tamil

Update 2 – கடலில் நீராட சென்ற 3 பேர்! – சிறுவனின் சடலம் மீட்பு

east tamil

Leave a Comment