பிறைந்துரைச்சேனை அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் 24வது மாணவர் பிரியாவிடை விழா நேற்று (செவ்வாய்க்கிழமை 24.12.2024) அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவுக்கு பிரதம அதிதியாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்திருந்தனர். நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பொறியியலாளர் எம்.எஸ். நழீம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா தொகுதி அமைப்பாளர் மற்றும் சட்டத்தரணி ஹபீப் றிபான் ஆகியோரும் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் சிறுவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1