இன்று (24.12.2024) பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் பரந்தன் பேருந்து நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.
உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், கிளிநொச்சி மாவட்ட செயலகப் பெண்கள் பிரிவு மற்றும் மாவட்ட மகளிர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயனி நவரத்தினம் தலைமையில் இடம்பெற்றதோடு, மீனாட்சி மாவட்ட செயலக உதவித்திட்டல் பணிப்பாளர் கேதீஸ்வரர் கலந்து கொண்டு குறித்த விற்பனை கண்காட்சியை திறந்து வைத்தார்.
தொழில் முயற்சியாளர்களை இணைய வழி சந்தை படுத்தலில் இணைக்கும் நிகழ்வும் இங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் அருந்தவராணி, தர்மம் நிலைய நிறுவுனர் நகுலேஸ்வரன், பெண்கள் வாழ்வுரிமைச் சங்கப் பணிப்பாளர் வாசுகி, பிரதேச செயலகங்களின் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், பரந்தன் வர்த்தக சங்க அங்கத்தவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்ட மகளிர் விவகாரக் குழு சம்மேளன அங்கத்தவர்கள், கிளிநொச்சி மாவட்ட மகளிர் விவகாரக் குழு சம்மேளன அங்கத்தவர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.