திருகோணமலை பட்டினமும் சூழலும் செயலாளர் பிரிவிற்குட்பட்ட இலுப்பங்குளம் பிரதான வீதி, புனரமைப்பு பணிகளுக்காக நீண்ட நாட்களாக ஆயத்த பணிகள் இடம்பெற்ற நிலையில் அப்படியே உள்ளது.
குறித்த வீதியில், வீதி புனரமைப்பின் பொருட்டு கிரவல் மண் கொட்டப்பட்டிருந்தாலும், புனரமைப்பு பணிகள் தொடராமல் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் தினசரி போக்குவரத்தினை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக, பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் ஆகியோர் இந்த பாதையில் பயணம் செய்வதில் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இவ் வீதியை முறையாக, புனரமைப்பு செய்து தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1