27.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம்

நேற்றைய தினம் (24.12.2024) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் இடம்பெற்றிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர்கள், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், விவசாய (விரிவாக்கம்) திணைக்கள அதிகாரிகள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் அதிகாரிகள், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள், தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் பண்ணையாளர்கள் என துறைசார் அதிகாரிகள் என பலரும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.

விசேடமாக தற்பொழுது விவசாயிகள் மத்தியில் பேசு பெருளாக இருக்கின்ற எலிக்காய்ச்சல் தொடர்பாக பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றுநோய் வைத்திய அதிகாரி ஏ.கார்த்திகா அவர்களினால் விவசாயிகள் தெளிவுபடுத்தப்பட்டு, தொடர்ச்சியாக மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகளான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நஸ்ட ஈட்டுக் கொடுப்பனவு, விவசாயிகளுக்கான இலவச பசளைக்கான கொடுப்பனவு, மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைப்பது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பல தீர்க்கமான முடிவுகள் இதன் போது எட்டப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

2024ம் ஆண்டு ஆட்சேர்ப்பில் கிழக்கு மாகாண 52 ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள்

east tamil

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு

east tamil

திருக்கோணமலையில் சுனாமி நினைவேந்தல்

east tamil

39 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வுபெறும் திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜன்

east tamil

ஆழிப் பேரலை நினைவில் ஆழ் கடல் சுத்தமாக்கல்

east tamil

Leave a Comment