26.5 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இலங்கை

துப்பாக்கியுடன் மாயமான திருகோணமலை கடற்படைச் சிப்பாய்!

திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்திற்குச் சொந்தமான பொருட்களுடன் கடற்படை லொறியில் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கடற்படைச் சிப்பாய் ஒருவர் உத்தியோகபூர்வ T56 துப்பாக்கி மற்றும் முப்பது தோட்டாக்கள் அடங்கிய மகசீனுடன் காணாமல் போயுள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி லொறியின் பாதுகாப்பில் இருந்த திருகோணமலை கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாயே மாயமாகியுள்ளார்.

இந்த லொறி நேற்று (24) இரவு கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​வரக்காபொல வாரயகொட பகுதியில், மேற்படி கடற்படை சிப்பாய், தனது சகோதரர் வீட்டில் இருந்து இரவு உணவு கொண்டு வருவதாகக் கூறி  லொறியில் இருந்து இறங்கிய போதும், அவர் திரும்பி வரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் லொறியில் இருந்து இறங்கி திரும்பி வராத நிலையில் வாகனத்தின் சாரதியாக இருந்த கடற்படை வீரர் சம்பவம் தொடர்பில் வரக்காபொல பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மனைவியை சுட்டுக்கொல்ல துப்பாக்கியுடன் தலைமறைவான திருகோணமலை கடற்படை சிப்பாய் கைது!

Pagetamil

பொது மன்னிப்பில் ரஷ்ய பெண்ணும் விடுதலை

Pagetamil

சுனாமி 20: ‘பேபி 81’ இற்கும் 20 வயது!

Pagetamil

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது

east tamil

மதுபோதையில் டிப்பர் செலுத்தியவரால் கொடூரம்: கிளிநொச்சியில் 2 வயது சிறுமி பலி!

Pagetamil

Leave a Comment