நத்தார் பண்டிகையை முன்னிட்டு, கிழக்கிலங்கையின் புகழ்பெற்ற புனித இடமான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் நத்தார் நள்ளிரவுத் திருப்பலி நேற்று (24.12.2024) நள்ளிரவு 11:45 மணிக்கு ஆராதனைகளுடன் ஆரம்பமானது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடிய இந்த திருப்பலியில் நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பிறப்பின் பெருமையை மையமாகக் கொண்டு நற்கருணை ஆராதனைகள் இடம்பெற்றன.
திருப்பலியை பங்குத்தந்தை ஜீனோ சுலக்சன் அடிகளார் ஒப்புக்கொடுத்து, இயேசு கிறிஸ்துவின் தெய்வீக உணர்வுகளை பகிர்ந்துகொண்டார்.
திருப்பலிக்குப் பின்னர் பக்தர்கள் ஒருவர் மற்றவர்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை வழங்கி சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு, பக்தர்களிடையே சமுதாய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாக அமைந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1