27.2 C
Jaffna
December 25, 2024
Pagetamil
கிழக்கு

பேத்தாழை துறைமுக பிரதேச சர்ச்சையை கேட்டறிந்த சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று (24) வாழைச்சேனை பேத்தாழை துறைமுகப்பகுதிக்கு கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

துறைமுகப் பகுதியில் நிலவும் சட்ட விரோத காணி அபகரிப்பு தொடர்பாக பிரதேச மீனவ அமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியமையினை அடுத்து நிலமைகளை கண்டறியும் பொருட்டு நேரில் சென்று பார்வையிட்டார்.

துறைமுகப் பகுதியின் அருகாமையில் உள்ள ஆற்றோர அரச காணி ஒன்றினை மீனவர்கள் தங்களது நாளாந்த போக்குவரத்து மற்றும் மீன் பிடி நடவடிக்கைகள் மற்றும் படகு நிறுத்தும் செயற்பாட்டிற்கு பயன்படுத்தி வந்த நிலையில், முன்னாள் பிரதேச அரசியல் வாதி ஒருவரின் சகோதரர்களில் ஒருவர் ஆற்றோடு சேர்த்து வேலிக் கட்டைகள் இட்டு அடைத்துள்ளதாகவும் அடைக்கப்பட்ட கட்டைகளை அகற்றி தருமாறும் மீனவ அமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.

சம்பவத்தை கேட்டறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இவ்விடயம் தொடர்பான பல்வேறுபட்ட ஆலோசனைகளை வழங்கினார். ஆற்றங்கரையோடு உள்ள காணிகளின் குறிப்பிட்டளவு பிரதேசம் அரசிற்கு சொந்தமானதாகவும் அவற்றினை தனியார் அபகரிக்கமுடியாது ஆனால் அதனை பராமரிக்கலாம் வேலி இடவோ,மதில் கட்டவோ முடியாது என்றார்.

எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்வை பெற்றுத் தருவதாக மீனவ அமைப்பு பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

இவ்வாறு கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை முன்னாள் அரசியல் வாதியின் சகோதரர் தரப்புக்கும், மீனவர் சிலருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

குறித்த காணி பிணக்கு தொடர்பாக கரையோர பேணல் திணைக்களத்திற்கு முறைப்பாடு தெரிவித்தனை அடுத்து அவர்கள் கடந்த வாரம் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலமைகளை அவதானித்தன் பின்னர் அடைக்கப்பட்ட கட்டைகள் சிலவற்றை அகற்றவேண்டும் என தங்களிடம் தெரிவித்ததாக மீனவ அமைப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தங்களது காணியின் கட்டைகள் சிலவற்றை மீனவர்கள் சிலர் இரவோடு இரவாக அகற்றியதாக குற்றம் சுமத்தி அவர்களுக்கெதிராக முறைப்பாட்டினை கல்குடா பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளனர்.

அது தொடர்பான விசாரணையை பொலிசார் முன்னெடுத்து தாம் செய்யாத குற்றச் செயலை செய்தாக தங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேற்படி விடயங்களை கவனத்திற் கொள்ளும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பவ இடத்திற்கு இன்று வரவழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-க.ருத்திரன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

72 ஆயிரம் மக்களுக்கான குடிநீர்

east tamil

இலுப்பங்குளம் வீதி புனரமைப்பு பணிகளில் தாமதம் – மக்கள் அவதி

east tamil

மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம்

east tamil

இலங்கை கராத்தே சங்கத்தின் மாகாணமட்ட கராத்தே சுற்றுப் போட்டி

east tamil

மட்டக்களப்பு சிறையிலிருந்த 12 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

east tamil

Leave a Comment