27.2 C
Jaffna
December 25, 2024
Pagetamil
இலங்கை

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும், பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்காக மேல் மாகாணத்தில் மாத்திரம் 6,500 ற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கிறிஸ்மஸ் தினத்தன்று நாடளாவிய ரீதியிலுள்ள 2000 க்கும் மேற்பட்ட ஆலயங்களில் விசேட திருப்பலி, ஆராதனைகள் நடைபெறவுள்ள நிலையில் அந்தந்த பொலிஸ் பிரிவுகளிலுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர், பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆலயங்களில் அமைக்கப்பட்டுள்ள சிவில் குழுக்களுடன் ஒருங்கிணைந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், அதற்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், தேவைப்பட்டால் இராணுவத்தினர் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினரின் உதவியும் பெறப்படும் என்றும்குறிப்பிட்டார்.

ஆராதனைகள் நடைபெறவுள்ள நிலையில் அந்தந்த பொலிஸ் பிரிவுகளிலுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்கள், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர், பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆலயங்களில் அமைக்கப்பட்டுள்ள சிவில் குழுக்களுடன் ஒருங்கிணைந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களின் இடம்பெற்ற அசம்பாவிதங்களை போல இனிவரும் காலங்களில் நடைபெறாமலிருக்க இப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், விரிவான பாதுகாப்புத் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பரந்தனில் பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி

east tamil

விளம்பரங்களில் சிறுவர்களை பயன்படுத்த தடை

east tamil

துப்பாக்கியுடன் மாயமான திருகோணமலை கடற்படைச் சிப்பாய்!

Pagetamil

ரணில் அரசு இடைநிறுத்திய மின்சாரசபையின் 62 ஊழியர்களுக்கும் மீண்டும் பணி!

Pagetamil

யாழ், காரைநகர் இ.போ.ச சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil

Leave a Comment