26.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
கிழக்கு

கிராமசேவகர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசீவன் தீவு கிராமத்தில் கடமையாற்றும் கிராமசேவகர் வெளிக்கள கடமை நிமித்தம் அலுவலகம் திரும்பும் வழியில் மதுபோதையில் வந்த குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பாதிப்பிற்குள்ளானவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (20) வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளை இச்சம்பவம் நாசீவன் தீவு துறையடியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட கிரம சேவகர் தெரிவிக்கும் போது- பிரதேச வாசி ஒருவர் கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றினுள் அத்துமீறி காணியை சுற்றி வேலி அமைத்திருந்த தகவல் அறிந்து தாம் நேரில் சென்று அதனை அகற்றுமாறு கூறியபோது அவ்விடத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.

குறித்த காணி விடயம் தொடர்பாக மேற்படி நபர் இன்று தமது அலுவலகத்திற்கு வருகை தந்து முரண்பாட்டில் ஈடுபட்டதாகவும் இதன்போது இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளாக அவர் தெரிவித்தார். பின்னர் தமது வெளிக்கள கடமை நிமித்தம் வெளியில் சென்றபோது குறித்த நபர் உட்பட 5 பேர் கொண்ட குழுவினர் கம்பு, பொல்லுகள் சகிதம் வந்து தம்மை தாக்கியதாக தெரிவித்தார்.

இதன்போது சம்பவத்தை கண்ட பொதுமக்கள் சிலர் தம்மை அவர்களிடமிருந்து பாதுகாத்தாக மேலும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் பற்றி கேள்வியுற்ற கோறளைப்பற்று பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்டுள்ள கிராமசேகரை பார்வையிட்டனர்.

சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளதாக நிலையப் பொறுப்பதிகாரி கருத்து தெரிவித்தார்.

-க.ருத்திரன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பணிப் புறக்கணிப்பு

east tamil

மியான்மார் அகதிகள் திருகோணமலையில்

east tamil

உபவேந்தர் கடத்தல் விவகாரம்: சி.ஐ.டி விசாரணைக்கு கருணா அம்மான்

east tamil

முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் மஜீத் காலமானார்.

east tamil

திருகோணமலை மாவட்டச் செயலக ஒளி விழா

east tamil

Leave a Comment