25.2 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இலங்கை

சீன தூவரின் கருத்திற்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கண்டனம்

இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிவினை மாத்திரம் அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களின் தீர்வினை சீனா கணிப்பிடமுடியாது என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்தார்.

அண்மையில் யாழ் மாவட்டத்திற்கு வந்த சீனதூதுவர் தமிழ் மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்து தமது தீர்வு தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்- சீன தூதுவருக்கு சிறிய தெளிவு படுத்தல் ஒன்றினை வழங்க விரும்புகின்றேன் தமிழ் மக்களை பொறுத்தவரையில் காணாமாலாக்கபட்டவர்களுக்கான தீர்வுகள் இன்னமும் கிடைக்கவில்லை. அரசியல் கைதிகள் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. தமிழ் மக்களின் இனப்படுகொலை இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. தமிழ் மக்கள் இன்றுவரை அரசியல்ரீதியாக ஒடுக்கப்பட்டு வருகின்றார்கள். அந்த அடக்குமுறையின் வீரியமும் வெளிப்படுகைகளும் மாறியிருக்கின்றன தவிர தமிழ் இன்றும் அடக்குமுறைக்கு உட்பட்ட இனமாகவே இருக்கின்றார்கள். இன்று வரை தமிழ் மக்கள் தேசிய இனமாகவே இருக்கிறார்கள். அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலை அடிப்படையாக வைத்து கொண்டு தமிழ் மக்களின் அரசியலை தீர்மானிப்பது எந்தவகையிலும் பொருத்தமற்றது. வெறுமனே பாராளுமன்ற தேர்தல் மட்டும் தமிழ் மக்களின் அரசியல் அல்ல அதையும் தாண்டி உள்ளது. ஆகவே இது தொடர்பில் எங்களுடைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மிக தெளிவாக அதனை குறிப்பிட்டுள்ளது.

ஆகவே இன்றுவரை தமிழ் மக்களின் பிரச்சினை காணாமலாக்கபட்டோர் பிரச்சினை இன்றுவரை எமக்கு பிரச்சினையாக உள்ளது. இந்த விடயங்கள் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க படவேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளோம்.

கலைப்பீட மாணவர் ஒன்றியம் என்ற வகையில் பெரும்பாலும் தமிழ் மக்களினுடைய நிலை என்ற வகையிலும் எந்த ஒரு நாடும் எமக்கு எதிரி நாடும் இல்லை நட்பு நாடும் இல்லை என்பது எங்களுடைய தத்துவமாக இருக்கின்றது. அதில் நாங்கள் நூறு விகிதம் தெளிவாக இருக்கின்றோம்.

தமிழ் மக்களினை பொறுத்தவரை தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள். கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள். கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை தான் இனப்படுகொலை என்பது வெறுமனே உயிர்ரீதியாக மாத்திரமன்றி பண்பாடுரீதியாக பொருளாதாரரீதியாக மேற்கொள்ளப்படுவது ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரயிலில் தவறவிடப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

east tamil

முல்லைத்தீவில் வினோதமான திருட்டு

east tamil

UPDATE: ‘மாமா பணத்தை தராததால் மாணவியை கடத்தினேன்’: மச்சான் கூறிய காரணம்!

Pagetamil

ரோஹிங்கிய முஸ்லிம் தொடர்பில் மீள குற்றப்புலனாய்வு விசாரணை

east tamil

தமிழ் மக்களின் போர்க்கால வாழ்க்கையை ஆவணமாக்கியவர் காலமானார்!

Pagetamil

Leave a Comment