26.1 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை

தொலைபேசிக்கு வரும் ஆசை வார்த்தை அழைப்பு… வங்கியிலிருந்த பணத்தை முற்றாக இழந்த யாழ் இளைஞன்

தொலைபேசி இலக்கத்திற்கு பெறுமதியான பணப்பரிசில் கிடைத்துள்ளதாக தெரிவித்து, இளைஞன் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்த இரண்டு இலட்சம் ரூபா பணம் நூதனமாக கொள்ளையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மேசன் தொழிலாளியான இளைஞன் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்த இரண்டு இலட்சம் ரூபா பணமே களவாடப்பட்டுள்ளது.

இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பேற்படுத்தியவர்கள், அவரது டயலொக் தொலைபேசிக்க ரூ.75,000 பணப்பரிசில் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இளைஞனின் வங்கிக் கணக்கில் ரூ.5,000 இற்கும் அதிகமான பணம் வைப்பிலிருந்தாலே அந்த பணப்பரிசில் கிடைக்குமென்றும் தெரிவித்துள்ளனர்.

இளைஞனின் வங்கிக் கணக்கிலக்கத்தையும், அடையாள அட்டை இலக்கத்தையும் அவர்கள் பெற்றுள்ளனர். இதன் பின்னர், இளைஞனின் வங்கியில் வைப்பிலிடப்பட்டிருந்த இரண்டு இலட்சம் ரூபா அபகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இளைஞன் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கொள்ளையர்கள் 0763978279 என்ற இலக்கத்திலிருந்தே கொள்ளையர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பணப்பரிசில் கிடைத்துள்ளதாக பேசுபவர்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலையில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்.

east pagetamil

சம்பூரில் பாலியல் துஷ்பிரயோகம் – பூசாரிக்கு 30 வருட கடூழிய சிறை!

east pagetamil

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைப்பு!

Pagetamil

நெற்றிக் கண்ணைத் திறத்தல்

Pagetamil

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் இறுதியானது!

Pagetamil

Leave a Comment