இலங்கைக்கான இந்திய தூதரை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேச்சு நடத்தினார்கள்.
கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
இதன்போது, ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை விவகாரம் உள்ளடக்கப்படாமை, 13வது திருத்தத்தின் போதாமைகள், மாவீரர்துயிலுமில்லங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட விடயங்கள் பற்றி தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரஸ்தாபித்தனர்.
இதேவேளை, இன்று காலையில் நடந்த தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில், விரைவில் ஜனாதிபதி அனுரவை சந்தித்து பேசுவதென தீர்மானிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1