அஸ்வசும சமூக நலன்புரி திட்டத்தினால் அநீதிக்கு உள்ளான மக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத்தின் ஆலோசனையின் பேரில் பத்து பேர் கொண்ட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலின் போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நலன்புரி பெறுனர்களாக நன்மைகளை பெற்றுக்கொண்டிருக்கும் மக்கள், நன்மைகளை இழந்தவர்கள் தொடர்பில் ஆராயப்படும் என சமூக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1