யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வலி வடக்கு சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவகெங்கா சுதீஸ்னரிடம் மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம், சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1