மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர் குருசுமுத்து வி.லவக்குமார் நேற்று சனிக்கிழமை இரவு வாழைச்சேனை பொலிசாரின் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இன்று வாழைச்சேனை கிழக்கு ஊடக மன்றத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தமது கருத்தினை தெரிவித்தார்-
நேற்று இரவு 10.05 மணிக்கு முற்சக்கர வண்டியில் 2 பொலிசார், ஊர்காவல் படை வீரர் ஒருவரும் வீட்டிற்கு வந்து கதவில் தட்டி தூக்கத்தில் இருந்தவர்களை எழுப்பி முரண்பாடான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
நான் எனது மனைவிற்கு அடிப்பதாக தெரிவித்து மனைவி 119 பொலிஸ் அவசரப்பிரிவில் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அது தொடர்பாக விசாரிப்பதற்கு வந்துள்ளதாகவும் பொலிசார் கூறினர்.
மனைவி இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளதகவும் நீ சண்டித்தனம் காட்டாதே.சண்டித்தனம் கதைக்காதே எனக் கூறி எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.
தனது மனைவியோ இவ்வாறதொரு சம்பவம் எனக்கு ஏற்படவில்லை. எனது கணவர் எனக்கு அடிக்கவில்லை. எனது கணவர் பல்வேறு சிவில் சமூக செயற்பாட்டு வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார். வாழைச்சேனை பகுதி பொலிசார் எனது கணவரை ஏதோ வகையில் பழிவாங்குவதற்காக எனது பெயரை பயன்படுத்தி பொய்யான முறைப்பாட்டில் இரவு வீட்டிற்கு வந்து அச்சுத்தல் விடுத்தனர் என்றார்.
-க.ருத்திரன்-