இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான டேவிட் மாலன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான டேவிட் மாலன், இங்கிலாந்து அணிக்காக 22 டெஸ்ட், 30 ஒருநாள் போட்டி 62 ரி20 ஆட்டங்களில் விளையாடி கூட்டாக 4,416 ரன்கள் சேர்த்திருந்தார்.
2022ஆம் ஆண்டு ரி20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் டேவிட் மலான் முக்கிய பங்கு வகித்திருந்தார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக வரவிருக்கும் ரி20, ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்து. இதில் டேவிட் மாலன் தேர்வு செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்காக எந்த வடிவத்திலும் அவர், விளையாடவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1