மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் பிரதான வீதியில் காட்டுமிராண்டித்தனமாக இப்ராஸ் எனும் 9 வயது சிறுவன் கடந்த 05 ஆம் திகதி தாக்கப்பட்டு 5 நாட்கள் வாழைச்சேனை தள வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பினார்.
குறித்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் குறித்த சிறுவனை தாக்கிய சந்தேக நபர் வாழைச்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
இவ்வாறு தாக்குதலுக்குள்ளான குறித்த ஒன்பது வயது சிறுவன் பெற்றோர் உறவினர்கள் ஆதரவற்ற நிலையில் குறித்த பிரதேசத்தில் வசித்து வந்ததாக தெரியவருகின்றது.
குறித்து சிறுவனை கடந்த 5ஆம் திகதி பிரதான வீதியில் அடித்து துன்புறுத்திய சந்தேக நபரை பொதுமக்கள் தடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
குறித்த சிறுவன் தாக்கப்பட்டு இதுவரை சிறுவனுக்கான நீதி மற்றும் நிவாரணம கிடைக்கப் பெறாத நிலையில் நேற்று திடீர் சுகையீனமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு நாடளாவிய ரீதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்ச்சியாக பல செயற்றிட்டம் இடம்பெற்று வந்தாலும் இவ்வாறு சிறுவர் துஷ்பிரயோகம் அதிகறித்த வண்ணமே உள்ளது எனவும் குறித்த சிறுவனுக்கு சரியான நீதி மற்றும் நிவாரணம் கிடைக்க வேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ்வாறு சிறுவனை தாக்கியவர் குறித்த பிரதேசத்தில் செல்வாக்குடன் உள்ளவர் என்பதுடன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட போதிலும் இது குறித்து தக்கப்பட்டவர் சார்பிலும் சரி அதிகாரிகள் சார்பிலும் சரி சிறுவனுக்கு எந்தவித அனுகூலமும் கிடைக்காத நிலையில் குறித்த சிறுவருக்கான நீதி தொடர்பிலும் சிறுவனின் ஆரோக்கியம் தொடர்பிலும் உரிய அதிகாரிகள் கவணம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-ரவ்பீக் பாயிஸ் –