ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத் தொடரின் முதலாவது கூட்டம் நாளை (17ஆம் திகதி) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து தேசிய மட்ட அரசியல் கூட்டணியொன்று ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பது வரலாற்றில் முதல் தடவையாகும் என கம்மன்பில தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு பாரம்பரிய தேர்தல் விஞ்ஞாபனத்திற்குப் பதிலாக மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற ஒரேயொரு ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர எனவும் கம்மன்பில மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1