எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் சகலதுறை வீரர் திலகரத்ன டில்ஷான் தீர்மானித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஐக்கிய தேசியக்கட்சியின் ரணில் விக்கிரமசிங்க பக்கம் தாவியதால் ஏற்பட்ட வெற்றிடமாக களுத்துறை மாவட்டம் பேருவளை தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளராகவும் டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (14) காலை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்த போதே அதற்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
ஏறக்குறைய 17 வருடங்கள் இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய டில்ஷான், சிறிது காலம் அதன் தலைவராகவும் இருந்தார்.
இதேவேளை, அண்மையில் இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹஷான் திலகரத்ன மற்றும் அவரது மனைவி திருமதி அப்சரி திலகரத்ன ஆகியோரும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.