25.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
தமிழ் சங்கதி

எந்தப் புற்றுக்குள் எந்தப்பாம்போ?: ரணிலை ஆதரிக்க உறுதியளித்தார்களா சுமந்திரன் குழு?

தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தையொட்டி தமிழ் அரசியல் பரப்பில் இரண்டு வேறு கருத்துக்கள் வலுவாக உள்ளன. பொதுவேட்பாளரை ஆதரிக்கும் தரப்புக்களை விட அதன் ஆபத்துக்களை சுட்டிக்காட்டி எதிர்ப்பவர்களே அதிகம்.

ஆனாலும், விடாக்கண்டன்களான சிலர் பொதுவேட்பாளர் தேவையென அடம்பிடித்து, பா.அரியநேந்திரனை தெரிவு செய்துள்ளனர். பொதுவேட்பாளர் விவகாரம் கொள்கையளவில் நன்றாக தோன்றினாலும், தற்போதைய களச்சூழல் அதற்கு பொருத்தமற்றது என்பதே பெரும்பாலானவர்களின் நிலைப்பாடு.

ஆனால், பொதுவேட்பாளர் தேவையென சிலர் ஒன்றிணைந்ததன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன.

இந்த குழுவில் உள்ள சில கட்சிகள் கிட்டத்தட்ட சேடம் இழுக்கும் நிலையில் உள்ளன. அவற்றின் அரசியல் எதிர்காலம் கிட்டத்தட்ட முடிவடையும் தறுவாயில் உள்ளது. பொதுவேட்பாளர் விவகாரத்தினால் ஏதாவது தமிழ் தேசிய உணர்வு தூண்டப்பட்டு, அடுத்தடுத்த தேர்தல்களில் தாமும், கட்சியும் கரைசேர்ந்து விட மாட்டோமா என அந்த கட்சிகள் கணக்குப் போட்டே பொதுவேட்பாளர் தேவையென களமிறங்கியுள்ளன.

இதுதவிர, சிவில் சமூகமென்ற பெயரில் இந்த குழுவில் உள்ள 7 பேருக்கும் பெரிய கனவுகளும், ஆசைகளும் உள்ளன. இந்த குழுவில் உள்ளவர்கள் எத்தனை காலம்தான் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருப்பது என யோசிக்கிறார்கள். அரசியல் கட்சிகளை வழிநடத்தும் பிரமுகர்களாக வேண்டுமென்ற ஆசை அவர்களுக்கு உண்டு. ஆனால், இதுவரை அது சாத்தியமாகவில்லை. இரா.சம்பந்தன் என்ற ஆளுமையின் முன்பாக அவர்களின் பாச்சா பலிக்கவில்லை. சம்பந்தன் இல்லாமல் போன பின்னர், இந்த குழுக்களின் ஆசை நிறைவேறியுள்ளது. ரெலோ, புளொட், தமிழ் மக்கள் கூட்டணி போன்ற கட்சிகள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டிருந்த போதும், அவர்கள் சரியான அரசியல் முடிவை எடுக்கவில்லை. அந்த தனிநபர்களும், தாமும் சம தரப்பினர் என்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இப்பொழுது, இந்த தனிநபர்கள் இன்னொரு தீர்மானத்தை எடுத்துள்ளனர். அதாவது, பொதுவேட்பாளர் கட்டமைப்பிலுள்ள அரசியல் கட்சிகள், இனப்பிரச்சினை விவகாரமாக ஏதாவது பேச்சுக்களில் கலந்து கொள்வதென்றால், தனியாக கலந்து கொள்ள முடியாது. குழுவிலுள்ள 14 பேரும் கலந்து கொள்ள வேண்டுமாம்.

இப்பொழுது புரிகிறதா இந்த குழுவின் உள்நோக்கம் என்னவென்று?.

சிவில் சமூகமென்ற பெயரில் இந்த குழுவிலுள்ள 7 பேருக்கு இன்னும் பல அரசியல் ஆசைகள் உள்ளன. இந்த குழுவிலுள்ள நிலாந்தன் கடந்த பொதுத்தேர்தலில் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியில் வேட்பாளராக களமிறக்கப்படுவேன் என உறுதியாக நம்பியிருந்தார். அது கிடைக்காமல் போக, தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.

மற்றொருவரான திருகோணமலை யதீந்திராவை பற்றி சொல்லவும் தேவையில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தலில் போட்டியிட்டு, படுதோல்வியடைந்த மறுநாளே, கட்சி சார்பற்றவன் என காட்டிக்கொண்டு பத்திரிகைகளில் கட்டுரை எழுதி, அரசியல் அறிவுரை கூறத் தொடங்கியவர்.

இதேபொதுக்கட்டமைப்பு அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரை நீடித்தால். பொதுக்கட்டமைப்பின் தெரிவு என குறிப்பிட்டு, யாழ்ப்பாணத்தில் நிலாந்தனும், திருகோணமலையில் யதீந்திராவும் தேர்தலில் போட்டியிடுவார்கள். அல்லது தேசியப்பட்டியல் கோருவார்கள்.

இவர்கள்தான் இப்படியென்றால், பொதுவேட்பாளரை எதிர்க்கும் தரப்புக்களுக்கும் பல திட்டங்களுள்ள சிலர் உள்ளனர்.

எம்.ஏ.சுமந்திரன் தரப்பு தமிழ் பொதுவேட்பாளரை எதிர்க்கிறார்கள். சுமந்திரன் எதிர்த்தால், சாணக்கியன் மூர்க்கமாக எதிர்ப்பார் என்பது தெரியும்தானே.

இதுபேதாதென, ரணில் விக்கிரமசிங்கவையும் சாணக்கியன் கடுமையான விமர்சித்து வருகிறார்.

ஆனால், இதே சாணக்கியனிற்கு மட்டக்களப்பு மாவட்டத்துக்கான அபிவிருத்தி நிதிகளென, ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நேரடிப்பணிப்புரையில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல, கிழக்கு மாகாணத்திலேயே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர்கள் பலரை விட, சாணக்கியனுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது, கிழக்கை சேர்ந்த அரசில் அங்கம் வகிக்கும் சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுத்தலாக இருந்துள்ளது. ரூ.60 கோடியென்பது பெருந்தொகை. அரசாங்கத்தை ஆதரிக்கும் ஏனைய பெரும்பாலானவர்களுக்கு ரூ.5 கோடி அபிவிருத்தி நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கிழக்கை சேர்ந்த சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசிய போது, இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.

“நாங்கள் வெளிப்படையக உங்களை ஆதரித்து, உங்களுக்காக வேலை செய்கிறோம். எமக்கு கொஞ்சக்காசு ஒதுக்கி விட்டு, உங்களை பகிரங்கமாக விமர்சிக்கும் சாணக்கியனுக்கு இவ்வள பெருந்தொகை பணம் ஒதுக்கியுள்ளீர்களே“ என குறைபட்டுள்ளனர்.

இதற்கு ரணில் சொன்ன பதில்தான் ஹைலைட்.

“சுமந்திரன், சாணக்கியன் தரப்பினர் என்னுடன் பேச்சு நடத்தினார்கள். அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் என்னை ஆதரிப்பதாக வாக்களித்துள்ளனர். அதனால் அவர்களுக்க இப்பொழுது பெருந்தொகை ஒதுக்கியுள்ளேன். ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதும், உங்களுக்கும் இன்னொரு பெருந்தொகை ஒதுக்குகிறேன்“ என தெரிவித்துள்ளார்.

அண்மையில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் எம்.ஏ.சுமந்திரன் அணியை சேர்ந்தவர்கள் ஜனாதிபதி ரணிலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன், இராசபுத்திரன் சாணக்கியன், தவராசா கலையரசன், சண்முகம் குகதாசன் ஆகியோர் வெவ்வேறு தருணங்களில் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். ஆனால், இது தமிழ் அரசு கட்சி எம்.பிக்களுடனான சந்திப்பல்ல.

இதையெல்லாம் கூட்டிக்கழித்து பார்க்க ஏதாவது பொறி தட்டுகிறதா?

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

மாவை கட்சியின் தலைவரா?… இல்லையா?: 5 மணித்தியாலங்கள் மல்லுக்கட்டியும் தமிழரசு மத்தியகுழுவில் முடிவில்லை!

Pagetamil

தேர்தல் தோல்வியுடன் சங்கு அணியில் குழப்பம்: 3 சிறிய கட்சிகளை வெளியே அனுப்ப முயற்சி!

Pagetamil

உட்கட்சி மோதலால் திண்டாடும் ரெலோ!

Pagetamil

சந்திக்கு வருகிறது உள்வீட்டு மோதல்: ரெலோவும் நீதிமன்ற படியேறுகிறது!

Pagetamil

Leave a Comment