25.6 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்க ரெலோ தீர்மானம்: ‘கலைத்து விடுவோம்’ என்கிறார்கள் பொதுக்கட்டமைப்பினர்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்று, நாளை(12) சந்திப்பில் கலந்து கொள்வதென தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதென 7 தமிழ் அரசியல் கட்சிகளும், சிவில் சமூகமென கூறிக்கொண்டு 7 தனிநபர்களும் இணைந்து, தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு என தம்மை பிரகடனப்படுத்தியுள்ளன.

இந்த கட்டமைப்பின் சார்பில் பொதுவேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தமிழ் தேசிய பொது கட்டமைப்பினருடனான கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார். நாளை (12) மாலை 5 மணிக்கு கலந்துரையாடல் நடக்குமென திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்வதில்லையென நேற்று தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினர் தீர்மானித்திருந்தனர்.

எனினும், திட்டமிடப்பட்ட கலந்துரையடலில் கலந்து கொள்வதென அந்தக் கட்டமைப்பிலுள்ள அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தமிழ்பக்கம் இன்று மாலை செய்தி வெளியிட்டிருந்தது.

இன்று (11) இரவு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு கூட்டம் இணையவழியில் நடந்தது. இதன்போது நாளைய சந்திப்பில் கலந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளைய சந்திப்பில் புளொட், ஜனநாயக போராளிகள் கட்சிகளும் கலந்து கொள்ளவுள்ளன. க.வி.விக்னேஸ்வரன் திடீர் சுகவீனமுற்று வைத்தியசலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி ஓய்வில் உள்ளதால் அவரால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லையென்றும், அவர் தரப்பில் பிரதிநிதியொருவர் கூட்டத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பொதுக்கட்டமைப்பினர் எடுத்த தீர்மானத்துக்கு மாறாக கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க முடிவெடுத்துள்ளது பற்றி, அந்த குழுவிலுள்ள சிவில் சமூக பிரதிநிதிகளென தம்மை குறிப்பிடும் தனிநபர்கள் சிலரை தமிழ் பக்கம் வினவியபோது, அவர்கள் கடும் தொனியில் பதிலளித்தனர்.

“இந்த கட்டமைப்பிலுள்ள அரசியல் கட்சிகள் இனிவரும் காலங்களில் தமிழ் மக்களின் அரசியல், இனப்பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்களில் கட்சிகள் தனியாக கலந்து கொள்ள முடியாது. பொதுக்கட்டமைப்பிலுள்ள 14 பேரும் ஒன்றாக செல்ல வேண்டும். அதை தவிர்த்து, தனித்தனியாக கட்சிகள் சந்திப்புக்களில் கலந்து கொள்ள முயன்றால், அவர்களை இந்த கட்டமைப்பிலிருந்து கலைத்து விடுவோம்“ என கறாராக தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் – மனோ கணேசன் எம்பி

east tamil

இன்று காலை வரையான 24 மணித்தியாலத்தில் பதிவான மழைவீழ்ச்சி விபரம்

Pagetamil

18ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கில் கன மழைக்கு வாய்ப்பு

Pagetamil

சீகிரியாவில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்

east tamil

தேசிய மக்கள் சக்தி நிர்வாக அலுவலகம் தாளையடியில் திறந்துவைப்பு

east tamil

Leave a Comment