25.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
விளையாட்டு

‘ஒரு தொடரில் தோற்றதால் உலகமே அழிந்தது போல் உணரத் தேவையில்லை’: ரோஹித் ஷர்மா

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது குறித்த விமர்சனங்களுக்குக் காட்டமாகப் பதிலளித்துள்ளார் ரோஹித் ஷர்மா.

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இரண்டுக்குப் பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி இலங்கையிடம் தொடரைத் தோற்றிருக்கிறது.
1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி முதல் முறையாக இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரை இழந்து இருக்கிறது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகக் கவுதம் கம்பீர் முதல் முறையாகக் களம் காணும் ஒரு நாள் தொடர் இந்த இலங்கை தொடர் என்பதாலும், ரோஹித் ஷர்மாவைத் தவிர வேறு யாரும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதாலும் இந்தியன் அணியின் இந்தத் தோல்வி பேசுபொருளாகி, விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து மனம் திறந்து பேசியிருக்கும் ரோஹித் ஷர்மா, “இந்தத் தோல்வி எங்களுக்கு ஒருபோதும் மனச்சோர்வை ஏற்படுத்தவில்லை. இந்திய அணிக்காக நாங்கள் விளையாடுகிறோம். நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோம். அதில் வெற்றி – தோல்விகள் வருவதும், போதும் நடக்கத்தான் செய்யும். இந்த ஒரு தொடரை இழந்துவிட்டதால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல. இப்படியெல்லாம் கேள்விப்படும்போது காமெடியாக இருக்கிறது. ஒரு தொடரில் தோற்றதாலேயே உலகம் அழிந்துவிட்டதுபோல் உணரத் தேவையில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில தொடர்களில் தோற்பது விளையாட்டில் சகஜம்தான். தோல்வியிலிருந்து எப்படி மீண்டு வருகிறோம் என்பதுதான் முக்கியம்” என்று பேசியிருக்கிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

Leave a Comment