25.4 C
Jaffna
January 16, 2025
Pagetamil
இலங்கை

சாணக்கியனுக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடரவுள்ள வியாழேந்திரன்

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தன் மீது சுமத்தப்பட்ட இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தாம் அரசியலில் இருந்து விலகுவதாக சாணக்கியனுக்கு பகிரங்கமாக சவால் விடுவதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சவால் விட்டுள்ளார்.

செய்தியாளர் ஒருவர் தொலைபேசி மூலம் வினவிய கேள்விக்கு வீடியோ காணொளி மூலம் தமது பதிலை பதிவிடும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சாணக்கியன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி அதனூடாக அரசியல் செய்து தன்மீது கரை பூச துடிப்பதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது பிரத்தியேக செயலாளர் மற்றும் உதவியாளர் இலஞ்ச ஊழல் அதிகாரிகளினால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்லடி கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டமை தொடர்பில் தனியார் ஊடகங்களுக்கு தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள் சம்பவ தினமான அன்று நானும் அங்கு இருந்ததாகவும் இலஞ்ச ஊழல் அதிகாரிகள் வருகைத்தந்திருந்த வேலை அங்கிருந்து தாம் முச்சக்கர வண்டி ஒன்றில் தப்பி சென்றதாக பகிரங்கமாக பொய் குற்றச்சாட்டினை சுமத்தி வதந்திகளை பரப்பி இதனை வைத்து அரசியல் இலாபம் கான துடித்து வருகின்றார் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவ்வாறு தாம் எவரிடமும் இலஞ்சம் வாங்கவில்லை எனவும் இலஞ்ச ஊழல் ஆணைக் குழு அதிகாரிகள் கடமையில் இருக்கும்போது தாம் அவ்விடத்தில் இருக்கவில்லை எனவும் தனது மேய்ப்பாதுகாவலர் மூலம் அதனை தன்னால் நிரூபிக்க முடியும் எனவும் தெரிவித்த வியாழேந்திரன்.

குறித்த சம்பவத்துடன் தொடர்பு படுத்தி திரிபு படுத்திய கருத்துக்களை வெளியிட்ட சாணக்கியன் குறித்த சம்பவத்தின் போது தான் இருந்ததை நிரூபித்து காட்டினால் தான் அரசியலில் இருந்து முற்றாக விடை பெறுவதாகவும் அவ்வாறு நிரூபிக்காவிட்டால் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அரசியலில் இருந்து விடை பெறுவாரா? என பகிரங்க சவால் விடுவதாக இராஜாங்க அமைச்சர் வியாலேந்திரன் சவால் விட்டுள்ளார்.

தாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை செய்து வருவதினை பொறுக்க முடியாத சாணக்கியன் பொய்களை மாத்திரம் கூறி அரசியல் செய்துவரும் இரசமாணிக்கம் சாணக்கியனுக்கு தன்னை பற்றி அவதூறு கூறுவதற்கு எந்த வகையிலும் தகுதி இல்லை எனவும் அவர் மூளை இல்லாத அரசியல்வாதி எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

பல தடவைகள் சாணக்கியன் அவர்கள் தன்னுடன் நேரடியாகவும் சரி மறைமுகமாகவும் சரி பல சவால்களை விட்டு இருக்கின்றார் இருப்பினும் இவ்வாறு தான் செய்யாத ஒன்றை செய்ததாகவும் குறித்த சம்பவத்தின் போது உரிய இடத்தில் இல்லாத என்னை அங்கிருந்து தப்பி சென்றதாகவும் பொய்யாக வதந்திகளை பரப்பி அதில் அரசியல் இலாபம் காண துடிக்கும் சாணக்கியனுக்கு எதிராக தான் மான நஷ்ட ஈடு வழக்கு ஒன்றை பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன் போது சுட்டிக்காட்டினார்.

-ரவ்பீக் பாயிஸ்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் – மனோ கணேசன் எம்பி

east tamil

இன்று காலை வரையான 24 மணித்தியாலத்தில் பதிவான மழைவீழ்ச்சி விபரம்

Pagetamil

18ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கில் கன மழைக்கு வாய்ப்பு

Pagetamil

சீகிரியாவில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்

east tamil

தேசிய மக்கள் சக்தி நிர்வாக அலுவலகம் தாளையடியில் திறந்துவைப்பு

east tamil

Leave a Comment