வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மன்னார் பொதுவைத்தியசாலை காவலாளியை தாக்கி அத்தமீறி நுழைந்தது, வைத்தியசாலை விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தமை, வைத்தியர்கள் மற்றும் தாதியர்களை மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் இன்று அவர் மீது மன்னார் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனடிப்படையில், மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட அவர் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், மன்னார் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இதேவிதமாக குற்றச்சாட்டுக்களின் கீழ், சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபரான அர்ச்சுனா, மீண்டும் அதேவிதமான குற்றங்களில் ஈடுபட்ட நிலையில், நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
முன்னதாக, மன்னார் பொலிசாரால் அர்ச்சுனா கைது செய்யப்பட்டதும், அவரை விடுவிக்க ஈ.பி.டி.பியினர் தீவிரமாக முயன்றதாகவும், அது வெற்றியளிக்கவில்லையென்றும் தெரிய வருகிறது.