நில மோசடி புகார் அளித்திருந்த நடிகை கவுதமியிடம் ராமநாதபுரம் மாவட்ட போலீஸார் நேற்று ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சுவாத்தான் என்ற பகுதியில் 64 ஏக்கர் நிலம் வாங்கித் தருவதாக சிலர் நடிகை கவுதமியிடம் ரூ.3 கோடி பெற்றதாகக் கூறப்படுகிறது. இதில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தின் மதிப்பை உயர்த்திக் காட்டி போலியாக ஆவணம் தயாரிக்கப்பட்டதாக சென்னையில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை கவுதமி புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நடிகை கவுதமி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். இது சம்பந்தமாக சுமார் ஒரு மணி நேரம் நடிகை கவுதமியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1