இலங்கை மருத்துவ சபையின் பதிவு செய்யப்படாத கதிரியக்க சிகிச்சை நிபுணரையும், பதிவு செய்யப்படாத தாதி ஒருவரையும் வைத்து சிகிச்சை மேற்கொண்டு, சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பிரதான தனியார் வைத்தியசாலைக்கு எதிராக கொள்ளுப்பிட்டி பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
பதிவு செய்யப்படத கதிரியக்க நிபுணரான சரத்சந்திர அலகஹவத்த மற்றும் பயிற்சி பெறாத தாதி என கூறப்படும் நிமாலி மதுகா விஜேசேகர ஆகியோர் இந்த வழக்கின் ஏனைய சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
கொழும்பு 3 பகுதியைச் சேர்ந்த ஜனக மஹிஷ மீகமகே செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1