தென்மராட்சி, எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (12) மதியம் இந்த சம்பவம் நடந்தது.
மணல் வியாபாரத்தில் ஈடுபடும் உறவினர்களுக்கிடையிலான தகராறே துப்பாக்கிச்சூட்டில் முடிந்துள்ளது. இதில் ஒருவர் காயமடைந்து, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவயோகநாதன் தனுசன் (29) என்பவரே காயமடைந்தார்.
உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியாலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1