28.3 C
Jaffna
April 6, 2025
Pagetamil
கிழக்கு

தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் போராட்டம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரை விடுதலை செய்யுமாறு கோரி தென்கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் வெள்ளிக்கிழமை(28) மாலை பல்கலைக் கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வியாழக்கிழமை (27) சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 27 பேரை பொலிஸார் கைது செய்தனர். இவர்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (28) உத்தரவிட்டிருந்தது. ஏனைய கைது செய்யப்பட்ட ஏனைய 25 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு முன்பாக கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

-பாறுக் ஷிஹான்-

இதையும் படியுங்கள்

AI மூலம் யுவதிகளின் நிர்வாண படங்களை உருவாக்கிய இளைஞன் கைது!

Pagetamil

இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை

Pagetamil

நிலாவெளியில் பொலிசாருடன் கயிறு இழுத்த இளைஞர்கள்… 10 பேருக்கு வலைவீச்சு!

Pagetamil

உழவு இயந்திர சாரதியாக ஆசைப்பட்ட 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

Pagetamil

மட்டக்களப்பில் 4 பேருக்கு மரணதண்டனை

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!