Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் மூடப்பட்ட புகையிரத கடவையை கடக்க முயன்றவர் புகையிரம் மோதி பலி… பொறுப்பற்ற தனத்தினால் உயிரிழந்த இளைஞர் (CCTV)

கிளிநொச்சியில் புகையிரத கடவை மூடப்பட்டிருந்த நிலையில், பொறுப்பற்ற விதமாக வீதியை கடக்க முற்பட்ட குடும்பத்தர் புகையிரதம் மோதுண்டதில் பலியாகியுள்ளார்.

இன்று பிற்பகல் 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான புகையிரத கடவை மூடப்பட்ட நிலையில், குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளார்.

வீதியின் குறுக்கே இடப்பட்டிருந்த தடையை கடந்து, புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது, அவரை புகையிரதம் மோதித்தள்ளியது. அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விநாயகர்புரத்தை சேர்ந்த மதன் என அழைக்கப்படும், 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
4

இதையும் படியுங்கள்

அனுராதபுரம் வைத்தியசாலைக்கு புதிய பதில் பணிப்பாளர்

Pagetamil

எம்.பி பதவியை துறந்தார் மு.காவின் நளீம்!

Pagetamil

விக்கி அணியும் கட்டுப்பணம் செலுத்தியது

Pagetamil

பெண்ணை எரித்துக்கொன்ற சம்பவத்தில் மேலுமொருவர் கைது

Pagetamil

யாழில் படம் காட்ட முயன்று வாங்கிக்கட்டிய ஜேவிபி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!